துணை ஆணையர் அலுவலகம் திறப்பு
கள்ளக்குறிச்சி வணிகவரி அலுவலகத்தில் துணை ஆணையர் அலுவலகம் திறக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி வணிகவரி அலுவலகத்தில் புதிய துணை ஆணையர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாநில வணிகவரி துறையின் விழுப்புரம் துணை ஆணையர் டி.லீனா தலைமை தாங்கி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
துணை வரி அலுவலர்கள் கள்ளக்குறிச்சி பாலசுப்பிரமணியன், திருக்கோவிலூர் கவிதா, செஞ்சி வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வாழ்த்தி பேசினார். விழாவில் வணிகர் சங்க பேரமைப்பு மாநில இணை செயலாளர் வைத்திலிங்கம், மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட துணை தலைவர் வரதராஜலு, மாவட்ட இணை செயலாளர்கள் பழனி, குமரகுருபரன் மற்றும் சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story