கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு


கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
x

தேவரியம்பாக்கம், அகரம் கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. பொது மக்கள் முன்னிலையில் திறந்து வைத்தனர்.

காஞ்சிபுரம்

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் சொர்ணாவாரி பருவத்திற்கான நெல் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டு வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவிற்கு உட்பட்ட தேவரியம்பாக்கம், அகரம் கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு விழா நடைபெற்றது. தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சீபுரம் தொகுதி எம்.பி. ஜி.செல்வம், ஆகியோர் கலந்துகொண்டு நெல் பயிரிடும் விவசாயிகள் பயன் பெறும் வகையில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை கிராம விவசாயிகள், பொது மக்கள் முன்னிலையில் திறந்து வைத்தனர்.

அகரம் கிராமத்திலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும் திறந்து வைத்தனர். திறப்பு விழாவில் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், துணைத்தலைவர் பி.சேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் அமலிசுதா முனுசாமி, உலகநாதன், சஞ்சய் காந்தி, விவசாயிகள் சங்கத்தலைவர் பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story