நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு


நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
x
தினத்தந்தி 6 March 2023 12:15 AM IST (Updated: 6 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே செம்பராம்பட்டு கிராமத்தில் விவசாயிகள் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆவின் ஒன்றியக்குழு தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், தி.மு.க. நகர செயலாளர் துரைதாகப்பிள்ளை, ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல் கொள்முதல் நிலைய மேற்பார்வையாளர் மணிவண்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதில் நெல் கொள்முதல் நிலைய அலுவலர் பழனிவேல், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சூர்யா, தி.மு.க.நிர்வாகிகள் கமருதீன், பாப்பாத்தி நடராஜன், சிங்காரவேல், செல்வம், முனுசாமி, அன்பழகன், பன்னீர்செல்வம், ரவி, தனவேல், ஊராட்சி செயலாளர் ராஜா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story