நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு


நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
x
தினத்தந்தி 12 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-13T00:16:23+05:30)

காணை உள்ளிட்ட 4 கிராமங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன

விழுப்புரம்

விழுப்புரம்

காணை, கல்பட்டு ஊராட்சி

காணை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கல்பட்டு மற்றும் காணை ஆகிய ஊராட்சிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் காணை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கல்பட்டு மற்றும் காணை ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கல்பட்டு ராஜா, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய நிர்வாகிகள் பழனி, செல்வம், செல்வராஜ், நாராயணசாமி, மதன் சிவக்குமார், சுப்புராயன், புனித அய்யனார், ஊராட்சி மன்ற தலைவர் சபரிநாதன் மற்றும் நிர்வாகிகள் கணேசன், கிருஷ்ணன், விஜயகுமார், பரசுராமன், செந்தில், ராதாமணி, குமரன், ராகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தாழங்குணம், மேட்டு வயலாமூர்

இதேபோல் மேல்மலையனூர் அருகே உள்ள தாழங்குணம் மற்றும் மேட்டு வயலாமூர் ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு வட்டார கல்விக்குழு தலைவரும், தி.மு.க. ஒன்றிய செயலாளருமான நெடுஞ்செழியன் தலைமை தாங்கி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார்.

இதில் ஒன்றியக்குழு துணை தலைவர் விஜயலட்சுமி முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தாழங்குணம் வள்ளி ராஜாராம், மேட்டு வயலாமூர் எல்லம்மாள் சம்பத் மற்றும் துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story