ரூ.4.18 கோடியில் நவீன நெல் சேமிப்பு தளங்கள் திறப்பு


ரூ.4.18 கோடியில் நவீன நெல் சேமிப்பு தளங்கள் திறப்பு
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் ரூ.4.18 கோடி மதிப்பீட்டில் 4 நவீன நெல் சேமிப்பு தளங்களை காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் ரூ.4.18 கோடி மதிப்பீட்டில் 4 நவீன நெல் சேமிப்பு தளங்களை காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நெல் சேமிப்பு தளம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் தலா ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளம் அமைக்கும் பணி சுமார் ரூ.4.18 கோடி மதிப்பீட்டில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கியது.

இந்த பணிகள் தற்போது நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட இந்த நவீன நெல் சேமிப்பு தளம் திறப்பு விழா நேற்று நடந்தது.

மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக நெல் சேமிப்பு தளங்களை திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து அந்த நவீன நெல் சேமிப்பு தளங்களில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் அவர் நெல் சேமிப்பு தளங்களை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் (பொறுப்பு) காண்டிபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story