புதிய உணவு கூடம் திறப்பு


புதிய உணவு கூடம் திறப்பு
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 27 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதிய உணவு கூடம் திறப்புவிழா நடந்தது

சிவகங்கை

காரைக்குடி

கல்லல் ஊராட்சி ஒன்றியம் பொய்யலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு தயாரிப்பதற்கான புதிய சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவிற்கு பொய்யலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராதிகா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவரும், கல்லல் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவருமான திவ்யநாதன் புதிய உணவுக்கூடத்தினை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி, ஆசிரியை புவனேஸ்வரி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story