புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு

பரப்பாடி கக்கன் நகரில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
இலங்குளம் ஊராட்சி பரப்பாடி கக்கன் நகரில் ரூ.9.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு முன்னிலை வகித்தார். இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.
விழாவில் யூனியன் துணைத்தலைவர் இசக்கிப்பாண்டி, ஆழ்வாநேரி பஞ்சாயத்து தலைவர் எஸ்.கே.சீனிதாஸ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எஸ்.அருள்ராஜ் டார்வின், நிர்வாகிகள் சேகர், சின்னத்துரை, பஞ்சாயத்து துணைத்தலைவர் விஜி, வார்டு உறுப்பினர்கள் வீரசிங், வடிவேல், ஜார்ஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






