புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு
புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
முனைஞ்சிப்பட்டி அருகே மேலகோடன்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.6 லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்குடை, பாளையங்கோட்டை கிழக்கு வட்டாரம் கீழ புத்தனேரி ஊராட்சி முத்துராமலிங்கபுரத்தில் ரூ.5 லட்சத்தில் புதிய பேவர் பிளாக்சாலை மற்றும் வாறுகால் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, வட்டார தலைவர்கள் சங்கரபாண்டி, ரவீந்திரன், நளன், மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்போர்டு, கட்சி நிர்வாகிகள் மாரிமுத்து, ஆனந்தராஜன், ஜவஹர்லால் மன்ஞ், ராஜகோபால் உள்பட கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story