புதிய துணை சுகாதார நிலையம் திறப்பு


புதிய துணை சுகாதார நிலையம் திறப்பு
x

பருத்திப்பாட்டில் புதிய துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே பருத்திப்பாடு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தை மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து பருத்திப்பாட்டில் நடந்த விழாவுக்கு பஞ்சாயத்து தலைவர் ஊசிக்காட்டான் தலைமை தாங்கினார்.

நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.முத்துலட்சுமி குத்துவிளக்கு ஏற்றினார். விழாவில் நாங்குநேரி யூனியன் துணைத்தலைவர் இசக்கிப்பாண்டி, மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் என்.முத்துலட்சுமி, தி.மு.க. நிர்வாகிகள் சின்னத்துரை, மாயகிருஷ்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜான் ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story