புதிய கால்நடை மருந்தகம் திறப்பு


புதிய கால்நடை மருந்தகம் திறப்பு
x

புதிய கால்நடை மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட அனுப்பன்குளம் பஞ்சாயத்து ஆண்டியாபுரம் பகுதியில் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. புதிய மருந்தகத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், சிவகாசி யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் தனலட்சுமி கண்ணன், அன்பரசு, கலைமணி, சின்னதம்பி, தி.மு.க. நிர்வாகிகள் வனராஜா, பாண்டியராஜன், மாணவரணி திலிபன் மஞ்சுநாத், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் உசிலை தங்கராம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கோவில்ராஜா, தாசில்தார் லோகநாதன், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story