இணைய வழி சேவை மையம் திறப்பு


இணைய வழி சேவை மையம் திறப்பு
x

புதுக்கோட்டை கோர்ட்டு வளாகத்தில் இணைய வழி சேவை மையம் திறக்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கோர்ட்டு வளாகத்தில் இணைய வழி சேவை மையம் நேற்று திறக்கப்பட்டது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நீதிபதிகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். கோர்ட்டு நடவடிக்கைகள் தற்போது பெரும்பாலும் இ-பைலிங் முறை வந்துவிட்டது. வழக்கு தாக்கல் செய்தல், ஆவணங்கள் சமர்ப்பித்தல் உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது. புதிதாக திறக்கப்பட்ட இந்த சேவை மையமானது கோர்ட்டு நடவடிக்கைகளில் இணைய வழி சேவைகளை தெரிந்து கொள்ள முடியும். வழக்கின் நிலை, வழக்கு விசாரணைக்கான அடுத்த தேதி உள்பட வழக்கு தொடர்பான விவரங்களை புகார்தாரர்கள், வக்கீல்கள் உள்பட அனைத்து தரப்பினரும் இந்த மையத்தில் தெரிந்து கொள்ள முடியும்.


Next Story