பகுதி நேர ரேஷன் கடைகள் திறப்பு


பகுதி நேர ரேஷன் கடைகள் திறப்பு
x

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் பகுதி நேர ரேஷன் கடைகளை மகாராஜன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

தேனி

கடமலை-மயிலை ஒன்றியத்தில் ராஜேந்திரா நகர், நேருஜிநகர், தெய்வேந்திரபுரம், வெம்பூர், காமன்கல்லூர், செங்குளம் ஆகிய கிராமங்களில் ரேஷன் கடைகள் இல்லை. அங்கு ரேஷன் கடைகள் திறக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று நேருஜிநகர், ராஜேந்திரா நகர் உள்ளிட்ட 6 கிராமங்களில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டது. இந்த கடைகளை மகாராஜன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து, விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கடமலை-மயிலை ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கப்பாண்டி, கவுன்சிலர்கள் மச்சக்காளை, பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story