12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா
நெல்லையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரேஷன் கடை திறந்து வைக்கப்பட்டது.
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தனியாக ரேஷன் கடை வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து 2010-2011-ம் ஆண்டு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் இந்த ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டது. அதன்பிறகு இந்த கடை திறக்கப்படாமல் இருந்தது. இந்த கடையை திறக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் கார்த்திக் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திற்கு புகார் அனுப்பி இருந்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த ரேஷன் கடையை திறக்க கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இந்த நிலையில் ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. கார்த்திக் தலைமை தாங்கினார். ஊர் நிர்வாகிகள் அய்யப்பன், ரவி, சுரேஷ், செல்வராஜ் ஆகியோர் ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதைத்தொடர்ந்து நெல்லை சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் இந்த ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு ரேஷன் கடை ஊழியர் முருகன் பொருட்களை வழங்கினார். இந்த ரேஷன் கடை வாரத்தில் திங்கள், புதன் ஆகிய 2 நாட்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.