குன்னூர், கோத்தகிரி, கூடலூரில் சமரச துணை மையங்கள் திறப்பு
குன்னூர், கோத்தகிரி, கூடலூரில் சமரச துணை மையங்கள் திறப்பு
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 தாலுகாக்களில் சமரச துணை மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. இதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய்கிஷன் கவுல், சுந்தரேஷ், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர். குன்னூர் சமரச துணை மைய திறப்பு விழாவில் நீலகிரி மாவட்ட நீதிபதி அப்துல் காதர், நீலகிரி மாவட்ட சமரச மைய ஒருங்கிணைப்பாளர் லிங்கம், நீதிபதிகள் சந்திரசேகர், அப்துல் சலாம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் கூடலூர் சமரச துணை மைய திறப்பு விழாவில் சார்பு நீதிபதி முகமது அன்சாரியும், கோத்தகிரி சமரச துணை மைய திறப்பு விழாவில் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவர் வனிதாவும் பங்கேற்றனர். இதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு அதிக செலவில்லாமல் பொதுமக்கள் எளிதில் தீர்வு காணலாம் என்று கோர்ட்டு நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.