1 முதல் 5-ம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு


1 முதல் 5-ம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 14 Jun 2023 8:30 PM GMT (Updated: 14 Jun 2023 8:30 PM GMT)

நீலகிரியில் 1 முதல் 5-ம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து இந்த மாதம் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிக்கூடங்கள் திறப்பதில் 1 வாரம் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 12-ந் தேதி திறக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் கோடை விடுமுறைக்கு பின்னர் குழந்தைகள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்தனர். அவர்களை பெற்றோர்கள் இன்முகத்துடன் பள்ளிகளுக்கு அழைத்து வந்தனர். அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்புகள் மற்றும் பூங்கொத்துகள் கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டது.


Next Story