கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2-வது நுழைவு வாயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு


கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2-வது நுழைவு வாயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
x

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2-வது நுழைவு வாயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு.

கோயம்புத்தூர்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு 2 நுழைவு வாயில்கள் உண்டு. இதில் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து செல்ல பிரதான நுழைவு வாயிலை மட்டுமே போலீஸ் அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள், பார்வையார்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வந்தனர். 2-வது நுழைவு வாயில் பயன்படுத்தப்படாமல் மூடி கிடந்தது.

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற கமிஷனர் பாலகிருஷ்ணன் அலுவலகத்தை சுற்றி பார்த்து ஆய்வு செய்தார். அப்போது அவர் கமிஷனர் அலுவலகத்தின் 2-வது நுழைவு வாயிலை திறக்க உத்தரவிட்டார். இதன்படி நேற்று முதல் 2-வது நுழைவு வாயில் கேட் திறக்கப்பட்டு வாகனங்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டது. அங்கு போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், பிரதான நுழைவு வாயிலை போலீஸ் அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்துவர், பார்வையாளர்கள் உள்பட மற்றவர்கள் 2-வது நுழைவு கேட்டை பயன்படுத்த வேண்டும் என்றனர்.


Next Story