'தினத்தந்தி' செய்தி எதிரொலி:கோத்தகிரியில் பூட்டி கிடந்த கழிப்பிடம் திறப்பு


தினத்தந்தி செய்தி எதிரொலி:கோத்தகிரியில் பூட்டி கிடந்த கழிப்பிடம் திறப்பு
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி ராயன் தெருவில் பராமரிக்கப்பட்டும் பயனின்றி கழிப்பிடம் பூட்டி கிடந்தது. இதைதொடர்ந்து ‘தினத்தந்தி' செய்தி எதிரொலியால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கழிப்பிடம் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நீலகிரி

கோத்தகிரி: கோத்தகிரி ராயன் தெருவில் பராமரிக்கப்பட்டும் பயனின்றி கழிப்பிடம் பூட்டி கிடந்தது. இதைதொடர்ந்து 'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கழிப்பிடம் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பூட்டி கிடந்த கழிப்பிடம்

கோத்தகிரி ராயன் தெரு மற்றும் பொட்டு லைன் உள்ளிட்ட பகுதியில் ஏராளமான குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் ராயன் தெரு பகுதியில் ஆண், பெண்களுக்கான தனித்தனி கழிப்பிடங்கள், பெண்கள் துணிகள் துவைப்பதற்கான வசதி, குளியலறை, மின்சார வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாய கழிப்பிடம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த கழிப்பிடத்தை பயன்படுத்தி வந்தனர். தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் இந்த கழிப்பிடத்தை பராமரிப்பு செய்ய ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி பணிகள் நிறைவடைந்து சுமார் 6 மாதங்கள் ஆகியும் கூட கழிப்பிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படாமல் இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர்.

திறக்கப்பட்டது

இதுகுறித்து நேற்று தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியால் நேற்று பேரூராட்சி அதிகாரிகள் சமுதாய கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக திறந்து விடுமாறு உத்தரவிட்டனர்.

அதன்படி அந்த கழிப்பிடம் திறக்கப்பட்டு, அதற்குரிய சாவி அப்பகுதி மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த பேரூராட்சி செயல் அலுவலர், சுகாதார ஆய்வாளருக்கும் நன்றி தெரிவித்தனர்.


Next Story