நீர் மோர் பந்தல் திறப்பு


நீர் மோர் பந்தல் திறப்பு
x

சாயல்குடியில் அகில பாரத அய்யப்பா சேவா சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடியில் அகில பாரத அய்யப்பா சேவா சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதை பேரூராட்சி தலைவர் மாரியப்பன் ெதாடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிக்கு அய்யப்பா சேவா சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.செயலாளர் ராமமூர்த்தி, துணைத்தலைவர் முத்துராமலிங்கம், நிர்வாகி தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு காரைக்குடி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சாயல்குடி வழியாக ஏராளமான பக்தர்கள் தினசரி பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அவர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.


Next Story