விதிகளை மீறி இயக்கப்பட்ட5 வாகனங்கள் பறிமுதல்


விதிகளை மீறி இயக்கப்பட்ட5 வாகனங்கள் பறிமுதல்
x
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின்படி, நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குள், மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது 12 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், தகுதிச் சான்று புதுப்பிக்காத ஒரு ஆம்புலன்ஸ் வாகனம், 4 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதில் சாலை வரியாக ரூ.10 ஆயிரத்து 200, அபராதமாக ரூ.82 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. மேலும், 5 வாகனங்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற வாகன சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என வட்டார போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.


Next Story