மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இயக்கப்படும்சிறப்பு மலை ரெயிலில் புதிதாக 4 பெட்டிகள்;சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இயக்கப்படும்சிறப்பு மலை ரெயிலில் புதிதாக 4 பெட்டிகள்;சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x

சிறப்பு மலை ரெயிலில் இணைக்கப்பட்ட புதிய பெட்டிகளை படத்தில் காணலாம்.

தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு மலை ரெயிலில் புதிதாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி

குன்னூர்: மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு மலை ரெயிலில் புதிதாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிறப்பு மலை ரெயில்

நீலகிரி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக மலை ரெயில் உள்ளது. இந்த ரெயில் சேவை, ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். இதனால் நீலகிரி மலை ரெயில் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மலை ரெயில், ஊட்டி-குன்னூர் மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படுகிறது.

இந்த மலை ெரயிலில் பயணிக்க நீலகிரி மட்டுமின்றி வெளிமாவட்ட, வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மலை ரெயிலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பயணிகள் மலை ரெயிலில் பயணிக்க சீட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை இருந்து வருகிறது. இதற்கிடையே சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளுக்காக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

புதிதாக 4 பெட்டிகள் இணைப்பு

இந்த சிறப்பு மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை எளிதாக கண்டுகளிக்கும் வகையில் புதிய ரெயில் பெட்டிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது சிறப்பு மலை ரெயிலில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள், செல்லும் வழிகளில் இருபுறங்களிலுள்ள நீர்வீழ்ச்சி, மலை உள்ளிட்ட இயற்கை காட்சிகளை எளிதாக கண்டு ரசிக்கும் வகையில் இருபக்கவாட்டிலும் அதிகளவு கண்ணாடிகள் பொருத்திய 4 புதிய ரெயில் பெட்டிகளை தயார் செய்து இணைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்த 4 புதிய பெட்டிகள் நேற்று சிறப்பு மலை ரெயிலில் இணைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.


Next Story