ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0- 659 கஞ்சா வியாபாரிகள் கைது; 728 கிலோ கஞ்சா பறிமுதல்!


ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0-  659 கஞ்சா வியாபாரிகள் கைது; 728 கிலோ கஞ்சா பறிமுதல்!
x

கடந்த த 6 நாட்களில், 5 பெண்கள் உள்பட 659 கஞ்சா வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை,

போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று தமிழக போலீஸ்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் கடந்த 6.12.2021 முதல் 31.12.2022 வரை 3 கட்டங்களாக ஆபரேஷன் கஞ்சா வேட்டையை போலீசார் நடத்தினார்கள்.

இந்த நடவடிக்கையின் பலனாக தமிழகம் முழுவதும் 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்பனை தொடர்பாக 20 ஆயிரத்து 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 ஆயிரத்து 721 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 5 ஆயிரத்து 723 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.எனினும் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை.

இந்த நிலையில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 நடவடிக்கையை போலீசார் கையில் எடுத்துள்ளனர். இதனிடையே கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்களுக்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருந்தார்.

அதனை தொடர்ந்து போலீசார் கஞ்சா வேட்டையை தீவிரப்படுத்தினர். இந்த ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 நடவடிக்கையாக கடந்த 6 நாட்களில், 5 பெண்கள் உள்பட 659 கஞ்சா வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 728 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும், வியாபாரிகளின் 41 வங்கி கணக்கு முடக்கப்பட்டு 15 டன் குட்கா மற்றும் 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்து உள்ளது.


Next Story