ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணிக்கு 185 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணிக்கு 185 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை
x

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணிக்கு 185 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர்

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணிக்கு 185 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலூர் மண்டலத்துக்குட்பட்ட ஊர்களில் இருந்து திருத்தணிக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 10-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி வேலூரில் இருந்து 60 பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 30 பஸ்களும், சோளிங்கரில் இருந்து 10 பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 35 பஸ்களும், ஆம்பூரில் இருந்து 10 பஸ்களும், பேரணாம்பட்டில் இருந்து 10 பஸ்களும், குடியாத்தத்தில் இருந்து 30 பஸ்களும் என 185 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் வருகிற 9-ந் தேதி ரத்தினகிரி, வள்ளிமலை, கைலாசகிரி, ஜலகம்பாறை, முத்துக்குமரன்மலை, பாலமதி ஆகிய ஊர்களில் உள்ள முருகன் கோவில்களில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழாவுக்கும் பயணிகள் தேவைக்கு ஏற்பவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இந்த தகவலை போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story