மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம்
மக்களவை தேர்தலில் வாக்களிக்க வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் சேர்த்து 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்களிக்க இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக, 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து 17 மற்றும் 18-ந்தேதிகளில் 2,970 சிறப்பு பஸ்கள் என 2 நாட்களுக்கு மொத்தம் 7154 பஸ்கள் இயக்கப்படுகிறது. பிற ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 2 நாட்களுக்கு 3,060 பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.
ஏப்ரல் 20 மற்றும் 21-ந்தேதிகளில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் வகையில் 1825 சிறப்பு பஸ்கள் என 2 நாட்களுக்கு மொத்தம் 6,009 பஸ்கள், இயக்கப்படுகிறது. அதேபோல் ஏப்ரல் 20 மற்றும் 21-ல் பிற ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு திரும்ப 2,295 பஸ்கள் இயக்கப்படுகிறது.மொத்தம் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.