'நீட்' தேர்வுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்


நீட் தேர்வுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

நாளை நடைபெறும் ‘நீட்’ தேர்வுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்- கலெக்டர் அமர்குஷ்வாஹா தகவல்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் நாளை (ஞாயிற்றுகிழமை) மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நீட் தேர்வு நடைபெற உள்ளது. 864 பேர் தேர்வெழுத உள்ளனர்.

வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களுடைய தேர்வு மையத்திற்கு செல்ல ஏதுவாக வேலூர் - திருப்பத்தூர் வழித்தடத்தில் தேர்வு எழுதும் மையத்திற்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றது.

தேர்வு எழுதுபவர்கள் காலை 11 மணி முதல் தேர்வு மையத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வர்கள், தேர்வு ஏற்பாடுகள் தொடர்பாக வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் தேர்வு நாளன்று கல்லூரியில் நீட் தேர்வு நகர ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.


Next Story