ஆயுத பூஜையை முன்னிட்டுசிறப்பு பஸ்கள் இயக்கம்
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னைீலிருந்து திருப்பத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
திருப்பத்தூர்
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னைீலிருந்து திருப்பத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் உள்ள பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். எனவே வருகிற 30-ந்தேதி மற்றும் 1-ந்தேதி ஆகிய 2 நாட்களிலும் சென்னையில் இருந்து வேலூர் மார்க்கமாக இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் பூந்தமல்லி பைபாஸ் சாலையில் (மா.போ.க. பூந்தமல்லி பணிமனை அருகில்) இருந்து இயக்கப்பட உள்ளது.
மேலும் பூந்தமல்லியில் இருந்து வேலூருக்கு 30 பஸ்கள், ஆற்காட்டுக்கு 15 பஸ்கள், திருப்பத்தூருக்கு 30 பஸ்கள், குடியாத்தத்துக்கு 20 பஸ்கள், ஓசூருக்கு 30 பஸ்கள், தர்மபுரிக்கு 25 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப பல்வேறு இடங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story