சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் குழுக்களுக்கு வாய்ப்பு


சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் குழுக்களுக்கு வாய்ப்பு
x

சிறுதானிய உணகவம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்கள் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர்


சிறுதானிய உணகவம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்கள் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறுதானிய உணவகம்

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைக்க கீழ்க்கண்ட நிபந்தனையுடன் வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சிறுதானிய உணவகம் நடத்திட கீழ்காணும் தகுதி உள்ள மற்றும் விருப்பமுள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள் அல்லது கூட்டமைப்புகளில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகம் அமைவிடத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றியுள்ள பஞ்சாயத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்பு விண்ணப்பிக்கலாம்.

நிபந்தனைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும். தேசிய ஊரக வாழ்வாதாரத்தை இயக்க மேலாண்மைதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தியாளர் குழு அல்லது கூட்டமைப்பு சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் உள்ள அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். உணவு கட்டுப்பாட்டு துறையில் சான்று பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள்

மேலும் இதுகுறித்த விரிவான விவரங்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்தில் அமைந்துள்ள மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பங்களை திட்ட இயக்குனர் ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலக வளாகம், கலெக்டர் அலுவலகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story