ஆலாம்பாளையத்தில்திடக்கழிவு கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புஅதிகாரி பேச்சுவார்த்தை


ஆலாம்பாளையத்தில்திடக்கழிவு கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புஅதிகாரி பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:47 PM GMT)
நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையம் பேரூராட்சி சார்பில் 15-வது வார்டு தாஜ்நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை சேகரிக்கும் கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்து சுத்தம் செய்வதற்கான பணியை பேரூராட்சி அலுவலர்கள் மேற்கொண்டனர். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் திடக்கழிவு கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திடக்கழிவு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணவேணி அப்பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் பொதுமக்கள் சமாதானம் அடையாததால் திடக்கழிவு கிடங்கு அமைக்கும் பணி நடைபெறாமல் நிறுத்தப்பட்டது.


Next Story