தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை- வைகோ பேட்டி


தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை- வைகோ பேட்டி
x

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை என்று திருச்சியில் வைகோ தெரிவித்தார்.

திருச்சி

செம்பட்டு,ஜூன்.8-

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை என்று திருச்சியில் வைகோ தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள்

புதுக்கோட்டையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை. மக்களின் பேராதரவோடு கருணாநிதி வகுத்துத் தந்த பாதையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மிகச்சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலகட்டம் தமிழ்நாட்டின் பொற்காலம்.

பா.ஜ.க.வின் 8 ஆண்டு ஆட்சி

திராவிட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் எந்த சமரசமுமின்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியோடு இருக்கிறார். தி.மு.க. அரசின் ஓர் ஆண்டு கால ஆட்சிக்கும், பா.ஜ.க.வின் 8 ஆண்டுகால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது.

இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக வைகோவுக்கு ம.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

1 More update

Next Story