வெள்ளலூர் பஸ் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற எதிர்ப்பு


வெள்ளலூர் பஸ் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற எதிர்ப்பு
x

வெள்ளலூர் பஸ் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர்.

கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சி மாதாந்திர கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது அங்குள்ள விக்டோரியா ஹாலுக்கு வெளியே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் பதாகைகளை பிடித்தபடி, வெள்ளலூர் பஸ்நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தும், அந்த பணியை கைவிடாதீர்கள், மக்கள் கட்டிய வரிப்பணத்தை வீணாக்காதீர்கள் என்று வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர்.

பின்னர் மாநகராட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட பிரபாகரன் வெள்ளலூர் பஸ்நிலைய பணிகளை கைவிடக்கூடாது என்று வற்புறுத்தி பேசினார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறியதாவது:-

மத்திய அரசின் ரைட்ஸ் என்ற அமைப்பு சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. வெள்ளலூர் பஸ்நிலைய சாலைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்கான அறிக்கையை மாநகராட்சியிடம் தருவார்கள். அது கிடைத்ததும் மாநகராட்சி மன்றத்தில் ஒப்புதல் பெற்று தமிழக அரசுக்கு அனுப்புவோம்.

தற்போது வரை வெள்ளலூர் பஸ் நிலையம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. ரைட்ஸ்சின் அறிக்கை வந்தவுடன் தான் முடிவு எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story