மதுக்கடை அமைக்க எதிர்ப்பு; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


மதுக்கடை அமைக்க எதிர்ப்பு; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 10 Oct 2023 6:45 PM GMT (Updated: 10 Oct 2023 6:45 PM GMT)

மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்

சிவகங்கை

தேவகோட்டை ராம்நகர் பகுதி தாணிச்சாவூரணியை சேர்ந்த பொதுமக்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ஆஷாஅஜீத்திடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது, தாணிச்சாவூரணி பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. மேலும் பள்ளிகள், வழிபாட்டு தலங்களும், பஸ் நிலையம் மற்றும் போலீஸ் நிலையமும் அமைந்துள்ளது. ராம்நகர்-தாணிச்சாவூரணி சாலையில் வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான மதுக்கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மதுக்கடை வந்தால் பெண்கள், மாணவிகள் நடமாடுவதற்கு அச்சம் ஏற்படும் நிலை உருவாகும். இதுதவிர பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு சட்டம், ஒழுங்கு பாதிக்கவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் தனியார் மதுக்கடை திறப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story