அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு : கோவையில் ரெயில் மறியல் போராட்டம்


அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு :  கோவையில் ரெயில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2022 1:02 PM IST (Updated: 22 Jun 2022 1:08 PM IST)
t-max-icont-min-icon

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் எஸ்எப்ஐ அமைப்பினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்


முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன

இந்த நிலையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் எஸ்எப்ஐ அமைப்பினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வலுகட்டாயமாக இழுத்து செல்ல போலீசார் முயற்சி செய்தனர் மேலும் உத்தரவை மீறி ரெயில் மறியலில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்


Next Story