புதிய பாராளுமன்ற கட்டிட திறப்புக்கு எதிர்ப்பு


புதிய பாராளுமன்ற கட்டிட திறப்புக்கு எதிர்ப்பு
x

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

ராணிப்பேட்டை

சாவர்க்கர் பிறந்தநாளில் இந்திய நாட்டின் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றதை கண்டிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பை பதிவு செய்ய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. அறிக்கை வெளியிட்டார்.

அதந்படி நெமிலி, கணபதிபுரம் பகுதியில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் தமிழ்மாறன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஜெகபதி, சுரேஷ், தமிழ்ச்செல்வன், பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதே போல் பனப்பாக்கம் பகுதியில் நகர செயலாளர் தனஞ்செழியன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புகொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் செந்தமிழ்ச்செல்வன், விநாயகமூர்த்தி, வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story