அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஒதுங்கி கொள்ள வேண்டும் - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி பேட்டி


அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஒதுங்கி கொள்ள வேண்டும் - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி பேட்டி
x

தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் சண்டையிட்டு கொள்வது சரியல்ல என கோவையில் ஆறுகுட்டி கூறியுள்ளார்.

கோவை,

கோவையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பிரச்சினை செய்வது சரியா? ஜெயலலிதா இருந்திருந்தால் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை இருந்திருக்காது.

ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் விலகிக்கொள்ள வேண்டும். ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை தொண்டர்களை கேட்டா ஏற்படுத்தினார்கள்? தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் சண்டையிட்டு கொள்வது சரியல்ல. ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு பதிலாக வேறு யாராவது அதிமுக பொதுச்செயலாளராக வந்தால் பரவாயில்லை.

பன்னீர் செல்வம், பழனிசாமிக்கு அதிமுகவில் ஆதரவு இல்லை. கோஷ்டி பூசலால் அதிமுகவை அழிக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

சாதி அடிப்படையில் இருவரும் கட்சியில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதிமுகவை சாதிக்கட்சி போல் மாற்ற வேண்டாம். 2 பேரும் சண்டையிட்டுக்கொள்வதால் கட்சி இரண்டாக உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 2 பேரும் சண்டை போட்டுக்கொள்வதால் அதிமுக தொண்டர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story