மாலை 5 மணிக்கு வேட்பாளரை அறிவிக்கிறார் ஓபிஎஸ்


மாலை 5 மணிக்கு வேட்பாளரை அறிவிக்கிறார் ஓபிஎஸ்
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமது தரப்பில் போட்டியிடும் வேட்பாளரை மாலை 5 மணிக்கு அறிவிக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு அதற்கு பிப்ரவரி 27ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக முன்னாள் எம்எல்ஏ -வும், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக இருந்து வரும் கே.எஸ். தென்னரசுவை இன்று வேட்பாளராக அறிவித்தார்.

இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்களது வேட்பாளரை இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து வேட்பாளர் யார் என்று தனது ஆதரவாளர்களுடன் அறிவிப்பை வெளியிடுகிறார்.

அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று காலை தங்கள் வேட்பாளரை அறிவித்திருந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பில் யார் வேட்பாளராக களமிறக்க உள்ளார் என்ற ஆவலுடன் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Next Story