வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்


வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
x

வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தொடங்கிவைத்தார்.

ராணிப்பேட்டை

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் வாய், சுகாதாரம் மற்றும் வாய் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணியில் கலெக்டர் பங்கேற்றார். ஊர்வலம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் மருத்துவமனை முன்பு நிறைவடைந்தது.

இதில் மருத்துவ கண்காணிப்பாளர் உஷா நந்தினி, வாலாஜா நகராட்சி தலைவர் ஹரிணி தில்லை, டாக்டர்கள் பிரதீப், சாருமதி, செவிலியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story