மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை


மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை
x

கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இதில் சாலை வசதி, மின்சார வசதி, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 276 மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து பெரியதள்ளப்பாடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி நாகவேணி என்பவருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம் காசோலையையும் கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story