பவானிசாகர் அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு நீர் திறக்க உத்தரவு


பவானிசாகர் அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு நீர் திறக்க உத்தரவு
x

பவானிசாகர் அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"2024-2025ம் ஆண்டு முதல் போக பாசனத்திற்கு, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானித்திட்டப் பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகளின் நன்செய் பாசனத்திற்கு 15.08.2024 முதல் 12.12.2024 முடிய 120 நாட்களுக்கு 23,846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், கோபி, நம்பியூர், பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள நிலங்களும் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டத்திலுள்ள நிலங்களும் மற்றும் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்திலுள்ள நிலங்களும் என ஆக மொத்தம் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story