பில்லூர் காலனியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு


பில்லூர் காலனியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
x

பில்லூர் காலனியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

கரூர்

தோகைமலை அருகே பில்லூர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கத்திடம் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், மேற்கண்ட பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் குழாய் தனித்தனியாக வழங்குதற்கு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் தெருக்களில் உள்ள ஒரு சில வீடுகள் முன்பு பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் புதிய குடிநீர் குழாய் அமைக்க முடியவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக அதில் கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து தோகைமலை ஒன்றிய ஆணையர் விஜயகுமார் தலைமையில், வருவாய்துறையினர் பில்லூர் காலனியில் ஆக்கிரமிப்புகள் உள்ள இடங்களை அளவீடு செய்தனர். பின்னர் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை 3 நாட்களில் அகற்ற வேண்டும். இல்லையென்றால் ஊராட்சி நிர்வாகம் சார்பாக அகற்றப்படும் என உத்தரவிடப்பட்டது.


Next Story