மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்


மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
x

மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அருகே உள்ள பட்டணம்காத்தான் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் ராஜேந்திர பிரசாத்(வயது 31). ஸ்டுடியோ ஒன்றில் போட்டோகிராபராக வேலை பார்த்து வந்தார்.. திருமணமாகாத இவர் கடந்த 15-ந்தேதி பொங்கல் பண்டிகை அன்று மோட்டார் சைக்கிளில் பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் ஏற்பட்டு மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் அவர் மூளை சாவு அடைந்ததாக தெரிகிறது. இதனால் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது சகோதரி பேபி பிரியா சம்மதம் தெரிவித்தார். இதை தொடர்ந்து அவரின் இருதயம், கண், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை தானமாக வழங்கப்பட்டது.


Next Story