இயற்கை விவசாய விழிப்புணர்வு
இயற்கை விவசாய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நீலகிரி
கூடலூர்,
கூடலூர் அருகே மண்வயல் சமுதாயக்கூடத்தில் இயற்கை விவசா கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பொன் ஜெயசீலன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஸ்ரீ மதுரை ஊராட்சி மன்ற தலைவர் சுனில், கூட்டமைப்பின் செயல் இயக்குனர் பாதர் வர்கீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், எதிர்காலத்தில் இயற்கை விவசாயத்தின் தேவை மற்றும் இதன் மூலம் விவசாயிகள் பெறக்கூடிய லாபம் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் விவசாயிகளுக்கு காபி கொட்டைகள் உலர்த்துவதற்கான பிளாஸ்டிக் பாய்கள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story