அக்னிபாத் திட்டம் குறித்து வழிகாட்டல்-விழிப்புணர்வு நிகழ்ச்சி


அக்னிபாத் திட்டம் குறித்து வழிகாட்டல்-விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

அக்னிபாத் திட்டம் குறித்து வழிகாட்டல்-விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடக்கிறது.

பெரம்பலூர்

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) வரை https://agnipathvayu.cdac.inஎன்ற இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். அக்னி வீரர்களுக்கான இணையவழி தேர்வு வருகிற மே மாதம் 10-ந்தேதி நடத்தப்படவுள்ளது. மேலும் தேர்வானது எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளில் நடைபெறும். அக்னிபாத் திட்டம் குறித்தும், அக்னிவீர் வாயு வீரர்கள் தேர்வு குறித்தும் வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 04328-225352 என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது 9499055913 என்ற வாட்ஸ் அப் எண் வாயிலாகவோ தகவல் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story