ஓவியக்குதிரையை பார்த்து மெய்மறந்த ஒரிஜினல் குதிரை...

ஓவியக்குதிரையை பார்த்து மெய்மறந்த ஒரிஜினல் குதிரை...
x

என்னைப்போல் ஒருவனா....? என்று ஒரிஜினல் குதிரையை போன்று ஓடும் பஸ்சில் வரைந்த ஓவியத்தை பார்த்து ஒரு குதிரை மெய் மறந்து மிரண்டுபோய் நின்றது.

கோவை

என்னைப்போல் ஒருவனா....? என்று ஒரிஜினல் குதிரையை போன்று ஓடும் பஸ்சில் வரைந்த ஓவியத்தை பார்த்து ஒரு குதிரை மெய் மறந்து மிரண்டுபோய் நின்றது.

இந்த ருசிகர சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அது பற்றிய விவரம் வருமாறு:-

கோவை நகர பகுதியில் இருந்து சுற்றுப்புற பகுதிகளுக்கு சென்று வரும் ஒரு தனியார் பஸ் உள்ளது. இந்த பஸ்சில் பக்கவாட்டில் ஓடும் குதிரையின் ஓவியம் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. இந்த பஸ் நேற்று கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஒரு தியேட்டர் அருகே வந்து நின்றது. அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு குதிரை அந்த பஸ்சில் வரைந்துள்ள குதிரை ஓவியத்தை பார்த்து ஓடிவந்து பார்த்தது. அந்த ஓவியக்குரையின் முகத்தோடு முகம் பதித்து கொஞ்சுவதுபோல் காணப்பட்டது.

இதனை அந்த பகுதியில் உள்ளவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். இந்த நிலையில் அந்த பஸ் அங்கிருந்து கிளம்பியபோது, அந்த குதிரையும் அந்த பஸ்சின் பின்னாடியே ஓடியதை சாலையில் சென்றவர்களும், பஸ்சில் இருந்த பயணிகளும் ஆர்வமுடன் இதனை பார்த்தனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story