10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்..!


10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்..!
x

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.

சென்னை,

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தோ்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதையடுத்து மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதிய அனைத்து மாணவா்களுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும். தனித்தோ்வா்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தோ்வெழுதிய மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story