ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி


ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி
x

சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோயில் ஆவணி பெருங்கொடை விழா வருகிற 31-ந் தேதி தொடங்கி மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடக்க இருக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று கால் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9.45 மணிக்கு சுவாமி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கோவிலில் கால் நாட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பால்குடம் எடுக்கும் பக்தர்களுக்கு காப்பு அணிவிக்கப்பட்டது.

விழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக 31-ந் தேதி மாலை 4 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 2-ம் நாள் நிகழ்ச்சியாக 1-ந் தேதி காலை 10 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதலும், மதியம் 2 மணிக்கு பிள்ளையார் கோவில் மற்றும் அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுடலை ஆண்டவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இரவு 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை பூஜையும் அதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சுவாமி மயானம் சென்று வந்து சாமபடைப்பு பூஜையும் நடக்கிறது.

2-ந் தேதி காலை 9 மணிக்கு சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும், மதியம் 2 மணிக்கு பொங்கல் வழிபாட்டுடன் சிறப்பு பூஜையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சிறுமளஞ்சி இந்து நாடார் சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story