செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு மற்ற மாநில முதல்-மந்திரிகள் வாழ்த்து


செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு மற்ற மாநில முதல்-மந்திரிகள் வாழ்த்து
x

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு மற்ற மாநில முதல்-மந்திரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு பல்வேறு மாநில முதல்-மந்திரிகளுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்கள்.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அருணாசல பிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு, சிக்கிம் முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் ஆகியோர் செஸ் போட்டி சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்து, மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு சர்வதேச செஸ் போட்டி சிறப்பாக நடைபெற தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் ஆகியோர் சமூக வலைத்தளங்கள் மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.


Next Story