ஒத்தக்கடை, மாத்தூர் பகுதியில் நாளை மின்தடை


ஒத்தக்கடை, மாத்தூர் பகுதியில் நாளை மின்தடை
x

ஒத்தக்கடை, மாத்தூர் பகுதியில் நாளை மின்வினியோகம் இருக்காது.

மதுரை

மதுரை,

ஒத்தக்கடை, மாத்தூர் பகுதியில் நாளை மின்வினியோகம் இருக்காது.

ஒத்தக்கடை

மதுரை திருப்பாலை மற்றும் ஒத்தக்கடை துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட ஊமச்சிகுளம் மற்றும் ஒத்தக்கடை மின் அழுத்த பாதையில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஊமச்சிகுளம், தேவிநகர், ஆலாத்தூர், பாறைப்பட்டி, பெத்தாம்பட்டி, மந்திகுளம், எருக்கலைநத்தம், கொடிமங்கலம், கூலப்பாண்டி, வீரபாண்டி, ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால்தோட்டம், மீனாட்சி மிஷன் காலனி, காந்திநகர், மங்களக்குடி, ஜெயவிலாஸ் கார்டன், ஹரிணி ஆறுமுகாநகர் பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது.

இதுபோல், நரசிங்கம்பட்டி, மேலூர் துணை மின்நிலையங்களுக்குட்பட்ட தெற்குதெரு, நரசிங்கம்பட்டி, சூரக்குண்டு, விநாயகபுரம், சந்தைபேட்டை, முகமதியாபுரம், சிவன்கோவில் தெரு, உசிலம்பட்டி, செட்டியார் தெரு, வ.உ.சி.நகர், தென்றல் நகர், சிட்டம்பட்டி, பட்டணம், தெற்குபட்டி, கைலாசபுரம், பூசாரிப்பட்டி, அப்பன்திருப்பதி, மாத்தூர், செட்டிகுளம், இரணியம், வெள்ளரிப்பட்டி, பொருசுபட்டி, அரும்பனூர், புதுப்பட்டி, கொடிக்குளம், மலையாண்டிபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் காந்திராஜா தெரிவித்துள்ளார்.

அவனியாபுரம்

சமயநல்லூர் கோட்டம் அலங்காநல்லூர் துணை மின் நிலைய பீடரில் மாதாந்திரபராமரிப்பு பணி நடப்பதால் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.இதனால் கோயில் பாப்பாகுடி, கிருஷ்ணா நகர், சத்யா நகர், முத்தையா நகர், பாக்கியலட்சுமி நகர், பொதும்பு, என்.எம்.எஸ் நகர், மதுரா சிட்டி, இ.ஜி.ஐ.எல். நகர், கவிதா நகர், பட்டகுறிச்சி, குமாரம், அரியூர், சபரி கார்டன், ரங்கராஜபுரம், வடுகபட்டி, தண்டலை, சிவக்காடு, சரவணா டவுன்ஷிப், சின்ன பொதும்பு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சமயநல்லூர் கோட்ட மின் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்கு கோட்டம் அவனியாபுரம் மற்றும் அனுப்பானடி துணைமின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். அவனியாபுரம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பிரசன்னா காலனி 1 முதல் 9-வது தெரு வரை, பைபாஸ் ரோடு, வள்ளலானந்தாபுரம், ஜெ.ஜெ. நகர், வைக்கம் பெரியார் ரோடு,ரிங்ரோடு சந்தோஸ் நகர், குருதேவ் வீடுகள்,வைகை வீதிகள், காமராசர் நகர் குடியிருப்பு பகுதிகள் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் பழனி தெரிவித்தார். அனுப்பானடி துணைமின் நிலையத்திற்குட்பட்ட சிந்தாமணி பஸ் ஸ்டாப் முதல் நெடுங்குளம் மெயின்ரோடு, சிந்தாமணி பகுதிகள், கஜேந்திர புரம், பர்மாகாலனி, வேலம்மாள் மருத்துவமனை பகுதிகள், மற்றும் ஹன்னாஜோசப் மருத்துவமனை பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்தார்.


Related Tags :
Next Story