அதிமுகவில் எங்களுடைய சிலீப்பர் செல்கள், தேவைபடும் போது வருவார்கள் - டிடிவி. தினகரன் பேட்டி


அதிமுகவில் எங்களுடைய சிலீப்பர் செல்கள், தேவைபடும் போது வருவார்கள்  -  டிடிவி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 30 Jun 2022 4:16 PM IST (Updated: 30 Jun 2022 5:36 PM IST)
t-max-icont-min-icon

எங்களுடைய சிலீப்பர் செல்கள் இன்னும் அதிமுகவில் இருக்கிறார்கள், தேவைப்படும்போது வெளியில் வருவார்கள் என டிடிவி தினகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எங்களுடைய சிலீப்பர் செல்கள் இன்னும் அதிமுகவில் இருக்கிறார்கள், தேவைப்படும்போது வெளியில் வருவார்கள். அதிமுக சிங்கங்கள் அனைவரும் அமமுகவுக்கு வந்து விட்டனர். அதிமுகவின் தற்போதைய நிலையை பார்த்தால் வருத்தமாக உள்ளது. அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை, அடுத்தவர்கள் கட்சியில் தலையிட முடியாது. நாங்கள் நரி கூட்டத்தில் சேர விரும்ப மாட்டோம், நிர்வாகிகளை வைத்து தலைமை பதவியை தேர்ந்தெடுக்க முடியாது. தொண்டர்கள் தான் தேர்வு செய்ய முடியும். ஜனநாயக முறையில் போராடிக்கொண்டிருக்கிறோம் என்றார்.


Next Story