'நம்ம ஊரு சூப்பரு' சிறப்பு இயக்கம் தொடக்கம்


நம்ம ஊரு சூப்பரு சிறப்பு இயக்கம் தொடக்கம்
x

சேலம் அருகே வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. இதை அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

சேலம்

கருப்பூர்

நம்ம ஊரு சூப்பரு

ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி சீனிவாசா நகர் பகுதியில் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டத்தை நேற்று காலை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம், தலைமை தாங்கினார்.

சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன் (தி.மு.க.), அருள் (பா.ம.க.), மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் துணை மேயர் சாரதாதேவி, மாநகராட்சி ஆணையாளர், கிறிஸ்துராஜ், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.கண்ணன், ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

385 ஊராட்சிகளில் தொடக்கம்

இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு, தூய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கிராமப்புறங்களில் சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க 'நம்ம ஊரு சூப்பரு' என்ற சிறப்பு இயக்கம், சேலம் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 385 கிராம ஊராட்சிகளிலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கமானது ஊரக வளர்ச்சி துறை மூலம் அனைத்துதுறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும். இந்த சிறப்பு இயக்கம் அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை பல்வேறு பிரசாரங்கள் மற்றும் இயக்கங்களாக நடைபெற உள்ளது.

இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம், நமது வீட்டையும் சுற்றுப்புறத்தையும், தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். கழிவு பொருட்கள் கொட்டும் போது மக்கும் குப்பை தனியாகவும், மக்காத குப்பை தனியாகவும் கொட்ட வேண்டும்.

அதுபோல சாக்கடை கழிவுநீர், நீர் நிலைகளில் கலக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். வீட்டின் அருகே உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக பார்த்து கொண்டாலே போதும், நாம் சுகாதாரமாக ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பனை விதை நடும் திட்டம்

இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி ஆகியோர் ஏரி, குளம் பகுதிகளில் ஒரு லட்சம் பனை விதை நடும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். மேலும் இந்த பனை விதைகளை மரமாக்கி பாதுகாக்க வேண்டும் என அமைச்சர்கள் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் தாசில்தார் வல்ல முனியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், சந்தர், ஓமலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வகுமரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜா, வெள்ளக்கல்பட்டி தி.மு.க. கிளைச்செயலாளர் பாலு, சக்தி, மாவட்ட பிரதிநிதி மனோகரன், இளைஞரணி அமைப்பாளர் கிஷோர், மாவட்ட கவுன்சிலர் அழகிரி, ஒன்றிய கவுன்சிலர் லலிதா பாலாஜி, முன்னாள் தலைவர் சாமிநாதன், வார்டு உறுப்பினர்கள் தரணி மகேந்திரன், மனோகரன், பழனியம்மாள், சேலம் மாநகர தி.மு.க. நிர்வாகிகள், ஓமலூர் ஒன்றிய நிர்வாகிகள், வெள்ளக்கல்பட்டி கிளை நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி செயலாளர் நாகன் நன்றி கூறினார்.


Next Story