மேல்பேட்டை ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் தூய்மை பணி கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்


மேல்பேட்டை ஊராட்சியில்    நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் தூய்மை பணி    கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்
x

மேல்பேட்டை ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் தூய்மை பணியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்


திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம் மேல் பேட்டை ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு என்கிற திட்டத்தின் கீழ் தூய்மை பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி தூய்மை பணியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், இந்த திட்டத்தின் மூலம் ஊராட்சியில் உள்ள பஸ் நிலையம், பள்ளிகள், கோவில்கள், தெருக்கள், கழிவுநீர் கால்வாய்கள், மழை நீர் வடிகால், குடிநீர் தொட்டிகள், அங்கன்வாடி மையங்கள் என்று பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தூய்மைபணி மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம் மழை நீர் ஆங்காங்கே தேங்காமல் இருக்கும், நோய் தொற்று பரவுதல் தடுக்கப்படும்.

நகரப்பகுதி போன்று ஊராட்சி பகுதிகளிலும் தூய்மை பணியும் மேற்கொள்ளப்பட்டு பசுமை பாதுகாத்திடும் வகையில் அரசின் சார்பில் மரக்கன்றுகள் நட்டு பாதுகாத்திட அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். வீதிகளில் குப்பைகளை கொட்டுவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே நம்ம ஊரு சூப்பர் என்ற நிலையை அடைய முடியும் என்றார் அவர்.

இதில் திண்டிவனம் சப்-கலெக்டர் அமீத், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் காஞ்சனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீதாலட்சுமி, ராமதாஸ், மேல் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் கவுதமி இந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story