கைது செய்யப்பட்ட 302 பேரில் 108 பேர் திருச்சி சிறையில் அடைப்பு

கைது செய்யப்பட்ட 302 பேரில் 108 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 13-ந்தேதி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்துக்கு நீதி கேட்டு நேற்று முன்தினம் அந்த பள்ளி முன்பு நடந்த போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து பள்ளி வாகனங்களை தீக்கிரையாக்கினர். பள்ளிகளில் இருந்த அனைத்து பொருட்களும் சூறையாடப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 302 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் 108 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில், 108 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்துவரப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 8 பேர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






